LIVE
செய்திகள்

கோவையில் சங்கனூர் ஓடை தூர்வாரும் பணி தொடங்கியது.. மக்கள் மகிழ்ச்சி

Admin
Today
1.2K Views
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சங்கனூர் ஓடை நீண்ட வருடங்களாக புதர் மண்டி தண்ணீர் செல்ல வழியில்லாமல் கிடந்தது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை தூர் வார நிதி ஒதுக்கியதை அடுத்து பொக்லின் இயந்திரம் மூலமாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி அருகே துவங்கும் சங்கனுார் ஓடை, ரத்தினபுரி, ஜி.பி.சிக்னல், பாப்பநாயக்கன்பாளையம், இந்துஸ்தான் கல்லுாரி, மீனா எஸ்டேட், ஸ்டாக் எக்சேஞ்ச் வழியாக, சிங்காநல்லுார் குளம் அருகே, நொய்யல் ஆற்றில் கலக்கிறது. சங்கனுார் ஓடையை துார்வாரி, அரைவட்டச் சாலை ஏற்படுத்தினால், பிரதான ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அத்திட்டத்துக்கு துாசி தட்டப்பட்டது.முதல்கட்டமாக, ரூ.49 கோடியில் மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து சத்தி ரோடு வரை, பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை, கோவையில் நடந்த விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ஓடையை துார்வாரும் பணியை, மாநகராட்சி நேற்று முன்தினம் துவக்கியது. டையின் தரைத்தளத்தில் கருங்கற்கள் பதிக்கப்படுகின்றன. முட்செடி வளர வாய்ப்பிருப்பதாலும், கழிவு மண் அள்ள முடியாத சூழல் ஏற்படும் என்பதாலும், 4 இன்ச் உயரத்துக்கு கான்கிரீட் கலவை ஊற்றுவதற்கு ஆலோசனை நடந்து வருகிறது. ஓடை கரையின் இருபுறமும் கான்கிரீட் தடுப்புச்சுவர், கரையில் நடைபாதையுடன் சாலை வசதி ஏற்படுத்த, முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...