LIVE
ஆயுதம் செய்வோம்

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

Admin
Today
1.2K Views

கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலையில் தற்போது மாநகரில் பெருமளவு வெயில் இல்லாத இயல்பான வானிலை சூழல் நிலவுகிறது.

இதன் பின்னர் மழைக்கு வாய்ப்புள்ளதா என வானிலை ஆய்வாளர் சுஜயிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

கோவை மாநகரில் வெள்ளிக்கிழமை வரை பெரிதாக மழைக்கு வாய்ப்பில்லை. தென் மேற்கு பகுதியில் இருந்து காற்று வீச்சு இருப்பதால் இப்படி ஒரு சூழ்நிலை நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும்.

அதுவே வார இறுதி நாட்களிலும், ஞாயிறு அன்றும் காற்று குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் மாநகரில் அப்போது ஆங்காங்கே மழையை எதிர்பார்க்கலாம். மழை பெரும்பாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இருக்கும்.

வெப்பம் 34-35° செல்ஸியஸ் வரை இருக்கும். இரவு நேரங்கள் சௌகரியமான வானிலை நிலவும்.

Related News

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...