வாகனத்தில் சுற்றும் ‘ஆடு திருடும் கும்பல்’ கோவை மாவட்டத்தில் ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் அதிகமாகி விட்டது. காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சூலூர், மதுக்கரை, செட்டிபாளையம், கோவில்பாளையம், அன்னூர் வட்டாரங்களில் ஆடுகள் காணாமல் போவதாக புகார் அதிகமாகியுள்ளது. மாவட்டத்தில் தினமும் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. வேன், டெம்போ போன்றவற்றில் ஆடு திருடும் கும்பல் நள்ளிரவில் சுற்றுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆட்டை திருடி அதிகாலை நேரத்தில் மட்டன் கடையில் விற்பனை செய்து வருகின்றனர். ஆடுகளுக்கு அதிக தொகை கிடைப்பதால், இரும்பு திருட்டு, வீட்டு உபயோக பொருட்கள் திருட்டு, நகை திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டு வந்த திருடர்கள் கூட தற்போது ‘ஆடு களவாடுவதில்’ ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது. ஆடு திருடும் கும்பல் கையில் கத்தி, அரிவாள் வைத்திருப்பதாகவும், பொதுமக்கள் விரட்டி வந்தால் ஆயுதங்களை காட்டி மிரட்டி தப்புவதாகவும் தகவல் வௌியாகியுள்ளது. போலீசார் நள்ளிரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி ஆடு திருடும் கும்பலை பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
HOME
செய்திகள்
தமிழக அரசியல்
கோவையில் இன்று
சாமானியருடன் ஒரு நாள்
ஆன்மிகம்
சிறப்புகள்
தகவல் துளிகள்
Banner
Flash
Life Style
Maequee
Noyyal Cooking Channel
ஆயுதம் செய்வோம்
ஆரோக்கியம்
இன்றைய தினம்
இன்றைய திருக்குறள்
உணவுக்கடை
கட்டுரைகள்
களம் கண்டவர்கள்
கொங்கு சுற்றுலா
சினிமா
தமிழ் பேச்சு
தெரிந்து கொள்வோம்
தொழில்நுட்பம்
நொய்யல் கிச்சன்
போட்டோ ஸ்டோரீஸ்
மக்கள் கருத்து
மின்தடை தகவல்கள்
விளையாட்டு
விவசாயம்
வேலை வாய்ப்பு