LIVE
செய்திகள்

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

Admin
Today
1.2K Views
கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தன்னாசி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று படுத்திருந்தது. இதை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். புலி படுத்திருப்பதை ஒருவர் வீடியோவில் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல அதன் அருகே உள்ள கோலமாவு மலைப்பகுதியிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை வீட்டுக்கு வெளியே கட்டி வைக்க வேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அந்த பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு காமிராவையும் அவர்கள் பொருத்தி உள்ளனர். இதுபற்றி வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:- மதுக்கரை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடியதாக தகவல்கள் இல்லை. சம்பந்தப்பட்ட பகுதியில் 4 இடங்களில் கண்காணிப்பு காமிரா வைத்து சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம். சிறுத்தையை அடர் வனத்துக்குள் விரட்டவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த முயற்சி தோல்வி அடைந்தால் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வேறு இடத்தில் கொண்டு போய் விட அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சிறுத்தை நடமாட்டம் அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை மேயர் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியா?

கோவை மேயர் தேர்தலில் கமல் கட்சியின் மேயர் வேட்பாளராக அவரே போட்டியிட போவதாக ஒரு தகவலும் ஒரு பெண் கல்ல...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...