LIVE
செய்திகள்

துடியலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்; வாழை மரங்களை நாசப்படுத்தி அட்டகாசம்

Admin
Today
1.2K Views
கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் வாழைகளை நாசப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டன. கோவை மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒன்றாக இருக்கும் பொன்னூத்து மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது மலையடிவார பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதற்கிடையே துடியலூர் அருகே உள்ள பன்னிமடை ஊராட்சி பகுதிகளில் கடந்த 10 நாட்களாக காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு 8 காட்டு யானைகள் வெளியே வந்தன. வாழைகள் நாசம் பின்னர் இந்த யானைகள் தாழியூர் பகுதியில் பிரபாகரன், வெங்க டேஷ், மணி மற்றும் குமாரசாமி ஆகியோர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. தொடர்ந்து யானைகள் அங்கு பயிரிட்டு இருந்த வாழைகளை மிதித்தும், சாப்பிட்டும் நாசப்படுத்தின. இதில் 10 ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழைகள் நாசமானது. காலை வரை அங்கேயே முகாமிட்டு இருந்த யானைகள், அங்கு ஒரு வீட்டின் முன்பு வைத்திருந்த மின்மோட்டார் மற்றும் குழாய்களை சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், பொது மக்கள் பீதியில் உள்ளனர்.  இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கடந்த ஒரு மாதமாக துடியலூர் அருகிலுள்ள பன்னிமடை, கதிர்நாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் யானைகள் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களில் சுற்றி திரிகின்றன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. போராட்டம் நடத்த முடிவு யானைகள் நாசப்படுத்திய வாழைகள் மட்டும் ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும். எனவே வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...