LIVE
செய்திகள்

கோவையில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை கணக்கெடுத்து தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை

Admin
Today
1.2K Views
கோவையில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் 24 மணி நேர தடுப்பூசி மையங்கள், மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் என தொடர்ந்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில், முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு இரண்டாம் தவணை செலுத்த பலர் முன்வரவில்லை. இதுதொடர்பாக, சுகாதாரத்துறையினர் கூறியதாவது: கோவையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை 91 சதவீதம் பேருக்கு முதல்தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 55 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். முதல்தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாம் தவணை செலுத்தாதவர்கள் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். இதில், சிலர் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால், மக்களிடையே பயம் இல்லை. தற்போது முகக்கவசம் அணியும் பழக்கமும் குறைந்து வருகிறது. எனவே, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான் முழு பாதுகாப்பை பெற முடியும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். எங்களிடம் முதல்தவணை தடுப்பூசி செலுத்தி, இரண்டாவது தவணை செலுத்திக்கொள்ளாதவர்களின் பட்டியல் உள்ளது. அந்த பட்டியலை ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாரியாக பிரித்து அனுப்பியுள்ளோம். அங்கிருந்து செல்போன் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு எளிதில் இரண்டாம் தவணை தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதற்காக, 84 நாட்களுக்கு முன் எந்த இடத்தில் முகாம் அமைத்தோமோ அங்கேயே மீண்டும் முகாம் அமைத்து வருகிறோம். ஊராட்சிகள் மூலம் வீடுதோறும் சென்று இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. முகாமுக்கு வரமுடியாதவர்கள் இதில் பயனடைந்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...