LIVE
செய்திகள்

கோவை மத்திய சிறையில் இருந்து, 99 கைதிகளை விடுவிக்க சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

Admin
Today
1.2K Views
கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் என 1,800-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். அண்ணா பிறந்தநாளையொட்டி, 700 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் விடுவிக்கப்பட உள்ள கைதிகளின் பட்டியல் தயாராகிவருகிறது. இதுகுறித்து, கோவை சரக சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை சிறையில், பத்தாண்டு தண்டனைக் காலத்தை கடந்த 132 கைதிகள் உள்ளனர். சேலம் சிறையில் பத்தாண்டு தண்டனைக் காலத்தை கடந்தவர்கள் 32 பேர் உள்ளனர். சிறையில் இருந்து வெளியே சென்றால் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாதவர்கள் யார், சிறையில் நன்னடத்தையுடன் இருந்தவர்கள் யார் என ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், முதல்கட்டமாக கோவையில் 99 கைதிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். அரசின் இறுதி ஒப்புதல் பெற்று, அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...