LIVE
செய்திகள்

பஸ் ஸ்டாப்பில் மாணவிக்கு முத்தம்.. கோவையில் கம்பி எண்ணும் எலக்ட்ரீசியன்

Admin
Today
1.2K Views
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள பொன்னிவாடி கிராமம் எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (26) எலக்ட்ரிஷன் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதலை பல நேரங்களில் பல விதங்களில் ரவிக்குமார் கூறியும், அக்கல்லூரி மாணவி காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும் விடாத ரவிக்குமார் தொடர்ந்து அம்மாணவியை தன்னைத் தான் காதலிக்க வேண்டும் எனக் கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார் இதுகுறித்து மாணவி தனது பெற்றோர்களிடம் கூற, அவர்கள் ரவிக்குமாரை கண்டித்துள்ளார். இதனால் மாணவி மற்றும் பெற்றோர் மீது கடும் கோபத்தில் ரவிக்குமார் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரி மாணவி ஊர் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ரவிக்குமார், திடீரென மாணவியை இழுத்துக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் இதனால் அவமானமடைந்த அம்மாணவி தனது பெற்றோர்கள் தெரிவித்ததையடுத்து, மூலனூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தனிப்படை அமைத்த போலீசார், தலைமறைவான ரவிக்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் ரவிக்குமார் மூலனூர் தினசரி காய்கறி சந்தை உள்ள ஒரு தேனீர் கடையில் பதுங்கி இருந்ததாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து ரவிக்குமாரை மடக்கிப் பிடித்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவனை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...