LIVE
செய்திகள்

கோவை மாநகர மேயர் வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் சார்பில் கல்லூரி அதிபர் போட்டி

Admin
Today
1.2K Views
கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் சார்பில் கல்லூரி அதிபர் ஒருவரை களமிறக்க கமல் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. கோவை கனியூரில் பார்க் பொறியியல் கல்லூரி நடத்தி வரும் அனுஷா ரவியை, கட்சியிலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரனுக்கு மாற்றாக கொண்டு வர முயற்சிக்கிறார் கமல். திமுக, அதிமுக வேட்பாளர்களுடன் மோதுவதற்கு பொருளாதார ரீதியாக அனுஷா ரவி பொருத்தமாக இருப்பார் என்பது கமலின் கணிப்பு. விவசாய சட்டங்களை எதிர்த்து.. மநீம தலைவர்கள் டெல்லி சென்று போராடியது வரலாற்று தருணம்.. நகராட்சித் தலைவர், மேயர் பதவியிடங்களுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படுமா அல்லது மறைமுகத் தேர்தல் நடத்தப்படுமா என்பது இன்னும் தெளிவுப்படுத்தாத நிலையில், இப்போதே இரண்டுக்கும் தயாராகி வருகின்றன அரசியல் கட்சிகள். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறக்குவதற்கான வேட்பாளர் தேர்வுப் பணிகள் தொடங்கிவிட்டன. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கட்சியில் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் இப்போது வெளியேறிவிட்டதால் கமலுக்கு இது சவாலான காலகட்டமாக பார்க்கப்படுகிறது. வாக்குவங்கி வாக்குவங்கி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் குறிப்பிட்ட 10 மாநகராட்சிகளில் மட்டும் போட்டியிடுவது பற்றியும் கமல் ஆலோசித்ததாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை, திருச்சி, கோவை, மதுரை, என முக்கிய மாநகராட்சிகளிலேயே வேட்பாளர்களை தேடி பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டதாலும், ம.நீ.ம.வுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாலும் கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் கமல் ஸ்பெஷல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறாராம். கமல் போட்டி கமல் போட்டி மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரனுக்கும் தனக்குமான போட்டியாக கோவை மேயர் தேர்தலை அவர் கருதுகிறாராம். இதனால் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலிமை வாய்ந்த வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ள கமல், கல்லூரி அதிபர் அனுஷா ரவியின் பெயரை டிக் செய்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ஏற்கனவே திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...