LIVE
செய்திகள்

கோவை டூ கேரளா... ரெண்டு வருஷத்துக்கு பிறகு பஸ் பயணிகள் ஹேப்பி!

Admin
Today
1.2K Views
கோவையிலிருந்து கேரளாவுக்கு கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. கோவை- கேரளா போக்குவரத்து மீண்டும் தொடக்கம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 21 மாதங்களாக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து பயணிகள் பேருந்தும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் இன்று காலை முதல் பாலக்காடு, திருச்சூர், கொச்சின், மூணாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிகள் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பொதுமுடக்க தளர்வு காலத்தில் அதிகமான பயணிகள் ரயிலில் மட்டுமே பயணம் செய்த நிலையில், தற்போது பேருந்துகள் இயக்கப்படுவதால் தமிழக- கேரள எல்லை மாவட்டங்களின் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறும்போது, 'பேருந்தில் பயணம் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சனிடைசர் கொண்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். அத்துடன் பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். ஆர்டிசிபிஆர் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கோவை -கேரள எல்லையான வாலையார் பகுதிகளில் முகாம் அமைத்து அங்கு வரும் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை கடுமையாக சோதிக்கப்பட்ட பிறகே கோவைக்குள் அனுமதிக்கப்படும்' என்று ஆட்சியர் சமீரன் கூறியுள்ளார்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...