LIVE
செய்திகள்

கோவையில் தக்காளி விலை குறைந்தது- கிலோ ரூ.50க்கு விற்பனை

Admin
Today
1.2K Views
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கோவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து பசுமை பண்ணை கடைகளில் கிலோ ரூ.75-க்கு தக்காளி விற்பனை செய்ய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மார்க்கெட்டுகளுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் தக்காளியின் விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.100 முதல் ரூ.120-க்கு விற்பனையான தக்காளி நேற்று கிலோ ரூ.60க்கு விற்பனையானது. இன்று காலை கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நாட்டு தக்காளி ரூ.50க்கும், ஆப்பிள் தக்காளி ரூ.50க்கும் விற்பனையாகி வருகிறது. 2 நாட்களாக விலை உயர்ந்து காணப்பட்ட தக்காளியின் விலை இன்று குறைந்ததால் மக்களும் நிம்மதி அடைந்தனர். அவர்கள் மார்க்கெட்டுகளில் வழக்கம் போல் தக்காளி மற்ற காய்கறிகளை வாங்கி சென்றனர். இதேபோல் கோவை உழவர்சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.58க்கு விற்பனையாகி வருகிறது. ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் தக்காளி சீசன் தொடங்கியுள்ளதால் வருகிற நாட்களில் தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...