LIVE
செய்திகள்

முதலிடத்திலிருந்த கோவை - தூய்மை நகரம் பட்டியலில் இந்த ஆண்டு 2-வது இடம்

Admin
Today
1.2K Views
தூய்மை நகரங்களின் தரவரிசை பட்டியலில் கடந்தாண்டு, தமிழக அளவில் முதலிடம் பிடித்த கோவை மாநகராட்சி, இந்த ஆண்டு இரண்டாமிடத்துக்குப் பின்தங்கியுள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், 2016 ல், 'தூய்மை பாரதம்' இயக்கம் துவக்கப்பட்டது. ஆண்டுதோறும் மக்களிடம் கருத்து, கள ஆய்வுகள் அடிப்படையில் நாடு முழுவதும் தூய்மை நகரங்கள் தர வரிசைப்படுத்தப்படுகின்றன. இதற்கென, சேவை, தூய்மை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் 6,000 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு, 'ரேங்க்' வழங்கப்படுகிறது. இவ்வாண்டுக்கான 'ரேங்க்' பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. தேசிய அளவில் இந்தூர் (மத்திய பிரதேசம்) 5618.14 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. சூரத் நகர் (குஜராத்), 5559.21 பெற்று இரண்டாமிடம், விஜயவாடா (ஆந்திரா), 5368.37 பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளது. இவ்வரிசையில், 6,000க்கு, 2781.23 மதிப்பெண்களுடன் தமிழகத்தில் சென்னை முதலிடமும், தேசிய அளவில், 43வது இடமும் பிடித்துள்ளது. கோவை, 2308.41 மதிப்பெண்களுடன் தேசிய அளவில், 46வது இடமும், தமிழகத்தில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளது. மதுரை, 2207.59 மதிப்பெண்களுடன், 47வது இடமும், தமிழகத்தில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. கடந்தாண்டு, 2,337.11 மதிப்பெண் எடுத்து, கோவை மாநகராட்சி தேசிய அளவில், 40வது 'ரேங்க்' பெற்றது; தமிழக அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர்: க.ராஜ்குமார்-கோவை

Related News

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை இன்று அறிவித்துள்ளத...

கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கோவை விழா : ஜனவரியில் துவக்கம்

கொரோனா - 2.0 புதுச்சேரி சென்னை கோயம்புத்தூர் நீலகிரி திருப்பூர் சேலம் மதுரை திருச்சிராப்பள்ளி தூத்...

கோயம்புத்தூர்கோவை-கோவா இடையே விமானப் போக்குவரத்து துவக்க

கோவை - கோவா இடையே முதல்முறையாக விமானப் போக்குவரத்து சேவை புதன்கிழமை முதல் துவங்கியது. கோவை விமான ...

கோவை அன்னூர் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு (டிசம்பர் 03)

டிசம்பர் 03 ஆம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை இருக்க...

கோவை, மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி

கோவை மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...