LIVE
ஆரோக்கியம்

இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

Admin
Today
1.2K Views
நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்திய பாடில்லை. இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல. இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் நள்ளிரவைத் தாண்டியும், இன்றைய இளைஞர்களின் கை விரல்கள் இயங்குவதை நிறுத்திய பாடில்லை. காரணம்... வாட்ஸ் அப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்கள். இரவு 2 மணிக்கு மேல் தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து மனதையும், உடலையும் கெடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். இரவு தூக்கத்தைத் தொலைப்பதால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். சராசரியாக மனிதனுக்கு 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். தூங்குவதற்கு சரியான நேரம், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தான். ஏனெனில், அப்போதுதான் ‘மெலட்டோனின்’ என்ற ஹார்மோன் சரியாக சுரக்கும். வெளிச்சமே இல்லாத இரவில் தூங்கி வெளிச்சம் வந்தவுடன், எழுந்துவிட வேண்டும். அப்போதுதான், நமது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்து, ஆரோக்கியம் மேம்படும். சிலர், வேலை காரணமாக நள்ளிரவு 12 மணிக்கு மேல் தூங்க வேண்டிய சூழல் வரலாம். அவர்களும் இந்த 6-8 மணி நேர தூக்கத்தைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்துவிட்டு, பகலில் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்பது சரியானது அல்ல. பேஸ்புக்கில் அப்லோடு செய்த போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது, யாராவது கமெண்ட் செய்திருக்கிறார்களா, வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா என்று ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து செல்போனை சோதனை செய்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவை அனைத்துமே ஒரு வகையில் மனரீதியான பிரச்சினைகள்தான். இவர்கள் ஆழ்ந்த தூக்கம் என்ற நிலையை அடைவதே இல்லை. இந்தபிரச்சினையை மருத்துவ ஆலோசனை யின் பேரில் சில வகை தெரபி, மெலட்டோனினை சுரக்கவைக்கும் மாத்திரைகள் மூலம் குணப்படுத்த முடியும். இதுபோன்ற முறையற்ற தூக்கத்தில் இருந்து விடுபட ஒரே வழி, குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு செல்போனை தள்ளி வைத்துவிட்டு, சரியான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பதுதான்

Related News

அதிக விலையில் தக்காளி... சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி?

அதிக விலை கொடுத்து தக்காளியை வாங்கி சமைப்பது, பொருளாதார ரீதியாக பலருக்கு சுமையாக இருக்கும். தக்காளிய...

கொரோனாவும்.. காற்று மாசுபாடும்...

நுரையீரல், இதய நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக பாதிப்புக்கு ஆளாகி இர...

எந்த வயது குழந்தைக்கு, எத்தகைய புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம்...?

நீச்சல், ஓவியம், சிலம்பம், ஸ்கேட்டிங் என... குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பது நல்லதுதான் என்றாலும...

கொரோனா பிடியிலிருந்து கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பாக இருப்பது எப்படி? | Pregnancy women | Covid-19

...

கொரோனாவிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி..! | Noyyal Media

...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...