LIVE
நொய்யல் கிச்சன்

சூப்பரான செட்டிநாடு இறால் பிரியாணி

Admin
Today
1.2K Views
சிக்கன், மட்டன் பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று செட்டிநாடு ஸ்டைலில் சூப்பரான இறால் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் இறால் - அரை கிலோ பாஸ்மதி அரிசி - அரை கிலோ எண்ணெய் - தேவையான அளவு நெய் - ஒரு ஸ்பூன் வெங்காயம் - 3 தக்காளி - 4 பச்சை மிளகாய் - 4 மிளகாய் தூள் - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எலுமிச்சை பழம் - ஒன்று கொத்தமல்லி தழை - கால்கட்டு புதினா - ஒரு கொத்து பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று செய்முறை இறாலை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாஸ்மதி அரிசியை முக்கால் பாகம் வேக வைத்து அதில் அரை தேக்கரண்டி எண்ணெய், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிரம்பு, ஏலம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி சிம்மில் வைக்க வேண்டும். பிறகு கொத்துமல்லி புதினா, தக்காளி, பச்சை மிளகாய் அனைத்தையும் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி தக்காளியை வேக விட வேண்டும். தக்காளி வெந்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை போட்டு அரை எலுமிச்சை சாறு பிழிந்து சிம்மில் வைத்து வேக விடவும். இப்போது வேக வைத்த அரிசியை கொட்டி தம்மில் விடவேண்டும். தம் போடுவதற்கென்றே உள்ள தட்டை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு வடித்த கஞ்சி சட்டியை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் விடவேண்டும். சிறிது கஞ்சி தண்ணீரில் சிகப்பு கலர் பொடியை கரைத்து மேலே தூவி, அதன் மேல் நெய்யையும் ஊற்றி மறுபடியும் மூடி போட்டு தம்மில் 10 நிமிடம் விட வேண்டும்.

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...