LIVE
தொழில்நுட்பம்

புகைப்படம், வீடியோக்களை பகிர புதிய விதிமுறை பிறப்பித்த டுவிட்டர்

Admin
Today
1.2K Views
டுவிட்டர் சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற புதிய விதிமுறை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் சேவையை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளத்தில் தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. டுவிட்டர் நிறுவனம் பயனாளர்களின் தனியுரிமையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. ஏற்கனவே பயனாளரின் தொலைபேசி எண், முகவரி தனிப்பட்ட தகவல்களை வெளியிட தடை செய்துள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் தனி நபர்களின் புகைப்படம், வீடியோக்களை அவர்களின் ஒப்புதல் இன்றி பகிர தடை செய்து புது விதிமுறையை டுவிட்டர் அறிவித்துள்ளது. புது விதிகளின்படி பயனர்கள் தங்களின் அனுமதியின்றி வெளியிடப்பட்டதாக புகார் அளிக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் டுவிட்டரில் இருந்து அகற்றப்படும்

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...