LIVE
சிறப்புகள்

1,800 ஆண்டு கால வரலாற்றை தாங்கி நிற்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில்

Admin
Today
1.2K Views
கோயம்புத்தூர் மாநகரப் பகுதியில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் கோயில். இக்கோயில், கரிகால சோழன் என்னும் சோழ மன்னனால் இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இங்கு, சிவபெருமான் பட்டீசுவரர் என்ற பெயருடன், பச்சை நாயகி அம்மன் துணையுடன் காட்சியளிக்கிறார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், அருணகிரிநாதர் மற்றும் கச்சியப்ப முனிவர் போன்றவர்களால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இங்கிருக்கும் லிங்கம் சுயம்பு லிங்கம் என்று நம்பப்படுகிறது. தமிழர்களின் சிற்பக்கலைக்கு சான்றாக இக்கோயிலின், தூண்கள் அமைந்துள்ளன. இவற்றை பக்தர்கள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. இத்திருக்கோயிலின், புராதனப் பெயர் பிப்பலாரண்யம். பிப்பலம் என்றால் அரச மரம், ஆரண்யம் என்றால் காடு என அர்த்தமாகும். மேலும் காமதேனுபுரி, பட்டிபுரி, ஆதிபுரி, தட்சிண கயிலாயம், தவசித்திபுரம், ஞானபுரம், சுகலமாபுரம், கல்யாணபுரம், பிறவா நெறித்தலம், பசுபதிபுரம், மேலை சிதம்பரம் போன்ற மற்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. ஒன்பதாம் நூற்றாண்டில் சுந்தரர் இக்கோயிலுக்கு வருகை புரிந்து, தேவாரப் பாடல்கள் பாடியிருக்கிறார். பிற்காலத்தில் சோழ பேரரசன் முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சியில் இக்கோயிலில் அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு, கோயிலுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு நன்கொடைகள் அங்குள்ள சுவர்களில் ஆவணப்படுத்தப்பட்டன. பின்னர், பதினேழாம் நூற்றாண்டு வரை கொங்கு சோழர்கள், போசளப் பேரரசு, விஜயநகரப் பேரரசு மற்றும் நாயக்க மன்னர்கள் ஆட்சியின் கீழ் பல்வேறு நன்கொடைகள் இக்கோயிலுக்கு அளிக்கப்பட்டு வந்துள்ளன. இக்கோயிலின் கனக சபை பதினேழாம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் 63 நாயன்மார்களைக் கொண்ட மண்டபம் கட்டப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் கல்யாண மண்டபம் மற்றும் முன் மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு விமானமும் அமைக்கப்பட்டது. இத்தலம் தேவாரம் போன்ற சமய இலக்கியங்களிலும் பல வரலாற்று இலக்கியங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அருணகிரிநாதரால் பாடப்பட்ட திருப்புகழ் மூலமாக இத்தலத்தை பற்றிய ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய தகவல் கிடைக்கின்றன. சோழர்களின் பூர்வ பட்டையம் இவ்வாலயத்தின் வரலாற்றையும் இத்தலத்தில் வாழ்ந்த மக்களை பற்றியும் தகவல்களை கொண்டுள்ளது. இக்கோயிலுள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டுகளில் இருந்து ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த வழக்கங்களை அறிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு அன்று கோயிலை ஒட்டி செல்லும், நொய்யல் ஆற்றின் படித்துறையில் திதி கொடுக்க ஏராளமான பக்தர்கள் வருவது குறிப்பிடத்தக்கது. 1800 வருடங்களையும் கடந்து கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் வரலாறு இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. செய்தியாளர்: க.ராஜ்குமார்-கோவை

Related News

கோவை நம் கோவை.. பெருமை மிகு கோவை

கொங்குநாடு வந்தாரையும் வாழ்வில் நொந்தாரையும் வாழவைக்கும். வாங்..போங்.என மரியாதையோடு நாகரிகத்தையும...

கோயம்புத்தூர் எப்படி உருவானது :?

அழகான கொங்குத்தமிழ், மரியாதை தெரிந்த மக்கள், இதமான காற்று, பருத்தி விளையும் பூமி, இயற்கை போற்றும் அழ...

கோவை பீளமேடு..!! வளர்ச்சி பாதையின் வரலாற்று நிகழ்வுகள்..

பூளைமேட்டின் 300வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இந்த நன்னாளில், கோவையின் வரலாற்றையும் அறிந்து கொள்வது ...

அரிய தொழில்நுட்பத்தால் கட்டப்பட்ட கொடிவேரி அணை | Kodiveri Dam

...

கோவையில் ஒரு வாலிபால் கிராமம் | Volleyball Village of Coimbatore

...

100 வருடங்கள் பாரம்பரியம் கொண்ட - நெகமம் காட்டன் சேலைகள் | Traditional negamam cotton sarees

...

Trending News

கோவை மாநகரில் அடுத்து எப்போது மழைக்கு வாய்ப்பு? இதோ தகவல்

<p>கடந்த சில நாட்களாக கோடை மழை கோவை மாநகரை நனைத்து வந்த நிலை...

கோவையில் அதிகரிக்கும் ஆடு திருட்டு; பொதுமக்களே உசார்

<p>வாகனத்தில் சுற்றும் &lsquo;ஆடு திருடும் கும்பல்&rsquo; கோ...

இன்றைய தினம் - டிசம்பர் 3

<p>பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் உலக மக்கள் அனைவரும் மாற...

இந்தியாவிற்குள் நுழைந்தது ஒமிக்ரான் வைரஸ்- 2 பேருக்கு பாதிப்பு

<p>இந்தியாவிற்குள் ஒமிக்ரான் வைரஸ் தொற்று நுழைந்து விட்டதாக ...

கோவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கோவையில் தயார் நிலையில் 5 ஆயிரம் கிட்டுகள்: அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

<p>கோவை அரசு மருத்துவமனையில் ஒமிக்ரான் போன்ற புதிய வைரஸ் தொட...